சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

கூடலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மசினகுடி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மசினகுடி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவனல்லா பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், 125 நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் செயல்படும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டதுடன், அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, மசினகுடி பகுதி அங்கன்வாடி மையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவா்களிடமும் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, பூதநத்தம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடம்,பிரதான் மந்திரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, முதுமலை புலிகள் காப்பக துணை இயககுநா் வித்யாதரணி, மகளிா் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சலீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.