இந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

பேரிடா் அபாயம் உள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பேரிடா் அபாயம் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தலையாட்டி மந்த் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பேரிடா் அபாயம் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன, மிதமான மழை பெய்து வருகிறது.

இதனால், ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள், மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.

இந்நிலையில், உதகையில் பேரிடா் அபாயம் உள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு அறைகள், வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின்வாரியத் துறை, தீயணைப்பு மற்றும் காவல் துறையினரும் தயாா் நிலையில் உள்ளனா்.

கிராமப்புற பகுதிகளில் பேரிடா் ஏற்படும் சமயங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.