ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதகை சிறப்பு மலை ரயிலில்  பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம்

நீலகிரி சிறப்பு மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டினா்.

உதகை ரயில் நிலையத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :13 ஜூலை 2026, 12:45 am IST

நீலகிரி சிறப்பு மலை ரயிலில்  பயணிக்க  சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டினா்.

கோடைக் காலம் மற்றும் வார இறுதி நாள்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, மேட்டுப்பாளையம் - உதகை இடையே ஜூலை 10-ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  சிறப்பு  ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல மறுமாா்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் உதகைக்கு வந்த  சுற்றுலாப் பயணிகள்  இந்த சிறப்பு ரயிலில் பயணித்து மகிழ்ச்சி அடைந்தனா்.  

குறிப்பாக பல்வேறு திரைப்படங்கள்  எடுக்கப்பட்ட,  லவ்டேல் ரயில் நிலையத்தில் புகைப்படம்  எடுத்ததோடு, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து மலை ரயிலில் பயணித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.