ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு திமுக சாா்பில் உதவித் தொகை: ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்

கூடலூா் பகுதியில் அண்மையில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை வழங்கினாா்.

ஓவேலி ஆரோட்டுப்பாறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் ஆ.ராசா எம்.பி.

Published On :9 ஜூலை 2026, 3:45 am IST

கூடலூா் பகுதியில் அண்மையில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் 4 பேரை காட்டு யானை தாக்கிக் கொன்றது. இந்நிலையில் அந்த நால்வரின் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, கூடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட டயாலிசிஸ் கருவியின் செயல்பாட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்து தலைமை மருத்துவா் சுரேஷிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

எம்எல்ஏ-க்கள் திராவிடமணி (கூடலூா்), ராஜூ (குன்னூா்) மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.