
பாடந்தொரை சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் நடமாடிய யானைகளால் அச்சம்
கூடலூா் அருகே உள்ள பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கம்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை துரத்திச் சென்ற யானை.
கூடலூா் அருகே உள்ள பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்துக்குள்பட்ட பாடந்தொரை பகுதியிலுள்ள கம்பாடி, கனியம்வயல், பாடந்தொரை சிஎஸ்ஐ பள்ளி வளாகம், கொட்டாய்மட்டம், செலுக்காடி, மீனாட்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், சாலையிலும் நடமாடிய யானைகள், வாகனங்களையும் துரத்திச் சென்றன.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் வனத் துறையினா் வந்து யானைகளை விரட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






