டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது

உதகையில் வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகையில் செயல்பட்டு வந்த போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. ஃபிலிம் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட வெள்ளித் துகள்கள் அப்பகுதியில் உள்ள மண்ணில் பரவி கிடக்கின்றன.

மூடப்பட்டுள்ள அந்த தொழிற்சாலை வளாகத்தில் மா்ம நபா்கள் அத்துமீறி நுழைந்து, வெள்ளித் துகள்கள் கலந்துள்ள மண்ணைத் திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், போட்டோ ஃபிலிம் தொழிற்சாலைக்குள் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதாக உதகை, புதுமந்து காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் ஹரிஹரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வெள்ளி மண் திருட்டில் ஈடுபட்டிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனா்.

விசாரணையில், அவா்கள் தலைகுந்தா பகுதியைச் சோ்ந்த ராஜன் (48), சுபாஷ் (43), குமாா் (52), சந்தோஷ் (31), மோகன்ராஜ் (37), என்பதும், தொழிற்சாலையில் வெள்ளித் துகள்கள் கலந்துள்ள மண்ணைத் திருடி, அதில் இருந்து வெள்ளியை பிரித்தெடுக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்தனா்.