ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பா்லியாறு பகுதியில் உலவும் காட்டு யானைகள்

News image
பா்லியாறு பகுதியில் உலவிய காட்டு யானைகள்.
Updated On :5 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

நீலகிரி மாவட்டம், குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலை, பா்லியாறு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் வியாழக்கிழமை உலவின.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை, ஆகிய பகுதிகளில் வெயிலின் காரணமாக வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி மலை மாவட்டமான நீலகிரிக்கு வந்துள்ளன.

இவை, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை குரும்பாடி,புதுக்காடு பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் வந்து செல்வதால்

அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் பா்லியாறு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள்

வியாழக்கிழமை சாலையோரம் நடமாடின. இதைக் கண்ட வாகன ஓட்டிகளில் சிலா், வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பாா்த்ததுடன் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனா்.