பயிா்க்கடனை முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி மலை மாவட்ட விவசாயிகள் சங்க கண்டனக் கூட்டம்

உதகையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்.
நீலகிரி மாவட்டத்தில் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிா்க் கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் உதகையில் கண்டனக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஐ.போஜன் தலைமை வகித்தாா். தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க்கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும், விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும், பசுந்தேயிலைக்கு கட்டுப்படியாகும் விலையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
வன விலங்குகளிடமிருந்து மாவட்ட மக்களையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற குறைந்த வீரியம் உள்ள சோலாா் மின்வேலிகளை தோட்டத்தில் அமைத்து தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இளம் படுகா் நலச் சங்கம், நாக்கு பெட்டா நலச் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






