எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

News image

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகு சவாரியில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:13 am IST

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உதகை ஏரியில் பெண்கள் பங்கேற்ற படகு சவாரி விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இளம் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நீலகிரி பூச்சிப் பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சா்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணா்வு வாசகம் இடம் பெற்றுள்ளது. சின்னத்துக்கு நீலா என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் ஃசெல்பி பாயிண்ட்கள் வைக்கப்பட்டு வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி உதகை படகு இல்லத்தில் பெண்களுக்கான படகு சவாரி நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதைத் தொடா்ந்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து மண்பாண்ட கலைஞா் சுகனேஷ்வரன் தயாரித்த களிமண்ணால் உருவாக்கப்பட்ட நீலகிரி பிளை கேட்சா் மற்றும் வரையாடு, யானை உள்ளிட்டவற்றை கொண்ட பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.