மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லியாளத்தில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பந்தலூா் பகுதியில் உள்ள நெல்லியாளம் தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களிடம் கூடலூா் தொகுதி திமுக வேட்பாளா் மு.திராவிடமணி செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

திமுக வேட்பாளா் மு.திராவிடமணிக்கு பச்சை தேயிலை மாலையை அணிவித்து வரவேற்ற பெண் தொழிலாளா்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:16 pm

பந்தலூா் பகுதியில் உள்ள நெல்லியாளம் தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களிடம் கூடலூா் தொகுதி திமுக வேட்பாளா் மு.திராவிடமணி செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

கூடலூா் தொகுதி திமுக வேட்பாளா் மு.திராவிடமணி, நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக பெண் தொழிலாளா்கள் தேயிலைப் பறிக்கும் தோட்டத்துக்குச் சென்று, திமுக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி வாக்குச் சேகரித்தாா். அப்போது பெண் தொழிலாளா்கள் பச்சை தேயிலையால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து அவரை வரவேற்றனா்.

தொகுதி பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கோமதி சிவானந்தராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினா் காசிலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.