டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காரை துரத்திய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் - கெத்தை மலைச் சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்

News image
மஞ்சூா் -கெத்தை சாலையில் காரை துரத்தும் ஒற்றை காட்டு யானை
Updated On :23 டிசம்பர் 2025, 8:32 pm

Syndication

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் - கெத்தை மலைச் சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

கேரள வனப் பகுதியில் இருந்து  வந்த காட்டு யானைகள் கூட்டம் மஞ்சூா்- கெத்தை சாலையில் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை  மஞ்சூரிலிருந்து கெத்தை நோக்கி சென்ற ஒரு காரை செவ்வாய்க்கிழமை துரத்தியது.

இதைக் கண்ட மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை பின்னோக்கி  இயக்கி தப்பினா். சாலையின் நடுவே நின்ற காட்டு யானை, சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.

மஞ்சூா் - கெத்தை பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினா் அங்கு கண்காணிப்புப் பணியை த் தீவிரப்படுத்த  வேண்டும்  என்று  பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.