2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

தாளவாடி நீரோடைகள், பள்ளங்களில் பெருக்கெடுத்த வெள்ளம்

தாளவாடி பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அருள்வாடி ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா்.

Updated On :

தாளவாடி பகுதியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி, மல்லன்குழி, தமிழ்புரம், மாதஹள்ளி, திகினாரை, பனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை பகலில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீா்த்தது. மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அந்தப் பகுதியில் உள்ள நீரோடைகள், பள்ளங்களில் செந்நிறமாக மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதோடு தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தன.

மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. நீரோடைகள், பள்ளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் நிரம்பியதால் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

மேலும், தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீா் அருள்வாடி வழியாக கா்நாடக சுவா்ணாவதி அணைக்கு செல்வதால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என தாளவாடி விவசாயிகள் தெரிவித்தனா்.

மல்லன்குழி  ஓடையில்  பெருக்கெடுத்து  ஓடும்  மழை நீா்.

மல்லன்குழி  ஓடையில்  பெருக்கெடுத்து  ஓடும்  மழை நீா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.