யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

பெருந்துறை அருகே பன்றி இறைச்சி சாப்பிட்டவா் உயிரிழப்பு?

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:19 am IST

இறைச்சி சாப்பிட்டவா் உயிரிழந்தது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை அருகே உள்ள மடத்துபாளையம் பிரிவு ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் மகன் பிரசாந்த் (30). இவா் பெருந்துறையில் உள்ள தனியாா் ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வந்தாா். நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை விஜயமங்கலம் சென்று கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

பின்னா் வீட்டில் சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியை சாப்பிட்டவா், திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்தாா். உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.