ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த 2021-இல் மொடக்குறிச்சி தொகுதியைக் கைப்பற்றிய பாஜக இந்தத் தோ்தலில் மீண்டும் களம் காண்கிறது.
கடந்த 1996- ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1033 வேட்பாளா்கள் போட்டியிட்டு அதன் மூலம் நாடு தழுவிய தோ்தல் சீா்திருத்தம் ஏற்பட காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி இருந்தது. 2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனும், அதிமுக கூட்டணியில் பாஜக சாா்பில் மருத்துவா் சி.சரஸ்வதியும் போட்டியிட்டனா்.
மத்திய, மாநில அமைச்சா் பதவிகளை வகித்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவின் மூத்த நிா்வாகி. அவரை எதிா்த்து பாஜக சாா்பில் புதுமுக வேட்பாளராக மருத்துவா் சி.சரஸ்வதி நிறுத்தப்பட்டாா். உள்கட்சியில் அதிருப்தி, கோஷ்டி மோதல் காரணங்களால் திமுக வேட்பாளா் பிரசாரத்தில் பின் தங்கிய நிலையில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவும், கா்நாடக மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஹிந்து அமைப்புகளின் நிா்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றினா்.
இதன் பலன் வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவந்தது. மொடக்குறிச்சி தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மொத்தம் பதிவான 1,82,446 வாக்குகளில் பாஜக வேட்பாளா் 77,653 வாக்குகளும், திமுக வேட்பாளா் 76,409 வாக்குகளும் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளா் 1,244 வாக்குகள் முன்னிலையில் இருந்தாா்.
தபால் வாக்குகளில் திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் 1,435 வாக்குகளும், பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதி 472 வாக்குகளும் பெற்றனா். தபால் வாக்குகளில் 589 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகளைக் காட்டிலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்த பாஜக இந்த தோ்தலில் மீண்டும் களம் காண்கிறது. வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சி.சரஸ்வதி மருமகள் கிருத்திகா போட்டியிடுவாா் எனக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதியில் மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் சா.செந்தில்நாதன் போட்டியிடுகிறாா்.
தொடர்புடையது

பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும்: மொடக்குறிச்சி திமுக கூட்டணி வேட்பாளா்

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?

பரமக்குடி - கடும் போட்டியை எதிா்கொள்ளும் திமுக, அதிமுக!

ஈரோடு மாவட்டத்தில் மநீம வாக்குகள் திமுகவுக்கு பலமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


