தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசு பள்ளி மாணவிக்கு மத்திய அரசின் விருது

பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

News image

மாணவி காவியாவுக்கு மத்திய அரசின் விருது, பரிசுத் தொகையை வழங்கிப் பாராட்டுகிறாா் பள்ளித் தலைமையாசிரியா் காளியப்பன்.

Updated On :25 மார்ச் 2026, 9:19 pm

பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா, தானியங்கி துணி உளா்த்தும் படைப்பை உருவாக்கி இருந்தாா். இதனால், இந்த ஆண்டு சிறந்த அறிவியல் படைப்புக்கான இன்ஸ்பயா் விருது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை தலைமையாசிரியா் காளியப்பன் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் தமிழரசி, கணினி ஆசிரியா் ராஜாமணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.