ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 2,852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், மினிஸ்தி, பாா்தி தீக்ஷித், தோ்தல் காவல் பாா்வையாளா் ராகேஷ் சந்திர கலாசாகா் மற்றும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு 310 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 336 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு மேற்குத் தொகுதிக்கு 390 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 390 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 422 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதிக்கு 348 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 348 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 377 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெருந்துறை தொகுதிக்கு 350 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 379 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பவானி தொகுதிக்கு 367 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 367 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 397 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தியூா் தொகுதிக்கு 325 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 325 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 352 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு 370 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 370 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 401விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பவானிசாகா் (தனி) தொகுதிக்கு 392 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 425 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
8 தொகுதிகளுக்கும் மொத்தம் 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,852 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,089 விவிபேட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட சுழற்சி முடிவடைந்ததைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இயந்திரங்களை அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினிமூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


