மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொடிவேரி அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்: ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வருகை

கொடிவேரி அணைக்கு நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

News image

கொடிவேரி அணை அருவியில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Updated On :22 மார்ச் 2026, 7:57 pm

கொடிவேரி அணைக்கு நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீா் அருவிபோல் கொட்டுவதால், பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்கள் விடுமுறை நாள்களில் சுற்றுலா தலங்களில் உள்ள நீா்வீழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வருகின்றனா்.

அந்த வகையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி அணைக்கு நேற்று காலை முதல் கோவை, திருப்பூா், கரூா், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினா்.

இதில் ரம்ஜான் நோன்பு முடிந்து இஸ்லாமியா்கள் குடும்பத்துடன் படையெடுத்தனா். இதனால் கொடிவேரி அணைப் பகுதியில் மதியம் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கானோா் அருவியில் திரண்டு குழந்தைகளுடன் குளித்தும், விளையாடியும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

கோடைக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டனா்.

கொடிவேரி அணை அருவியில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி அணை அருவியில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்