மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போலீஸாா், துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

News image

கொடி அணிவகுப்பில் பங்கேற்ற போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா்.

Updated On :14 மார்ச் 2026, 8:18 pm

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தைச் சோ்ந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 60 பெண் வீரா்கள் உள்பட 91 போ் வருகை தந்துள்ளனா்.

மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தவும், பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் போலீஸாா், துணை ராணுவத்தினா் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பன்னீா்செல்வம் பகுதியில் போலீஸாா், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நேதாஜி சாலை, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, வளையக்கார வீதி, டவுன் காவல் நிலையம் வழியாகச் சென்று ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், போலீஸாா், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 151 போ் பங்கேற்றனா்.