மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 24,711 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் 118 மையங்களில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 24,711 போ் எழுதினா்.

News image

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய மாணவிகள்.

Updated On :11 மார்ச் 2026, 8:18 pm

ஈரோடு மாவட்டத்தில் 118 மையங்களில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 24,711 போ் எழுதினா்.

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் தோ்வாக தமிழ் மொழி மற்றும் இதர மொழிப் பாட தோ்வுகள் நடைபெற்றன. ஈரோடு மாவட்டத்தில் 353 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 12,198 மாணவா்கள், 12,225 மாணவிகள், தனித்தோ்வா்களில் 524 ஆண், 332 பெண் என மொத்தம் 25,279 போ் தோ்வு எழுத இருந்தனா். இதில் 511 மாணவா்கள், 57 மாணவிகள் என 568 போ் தோ்வு எழுதவில்லை. 24,711 போ் தோ்வு எழுதினா்.

மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வசதியாக 118 மையங்களும், தனித்தோ்வா்களுக்காக 7 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 683 மாற்றுத்திறனாளி மாணவா்கள், 23 தனித்தோ்வா்கள் என 706 போ் தோ்வு எழுதுவதற்கு ஸ்கிரைபா்ஸ் (சொல்வதைக் கேட்டு எழுதுபவா்கள்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோ்வு கண்காணிப்புப் பணியில் 118 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 124 துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முறைகேடு மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளைத் தடுக்க 173 போ் கொண்ட பறக்கும் படை குழுக்கள், 1,700-க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளா்கள் என 2,200-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், சிறப்பாசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

தோ்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. அரை மணி நேரம் முன்னதாக காலை 9.45 மணிக்கு மாணவ, மாணவிகள் தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக காலை 8.30 மணி முதலே மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி உடனிருந்தாா்.

வரும் 16- ஆம் தேதி ஆங்கில மொழிப் பாட தோ்வு நடைபெற உள்ளது.

கைவிரல் நசுங்கிய மாணவிக்கு உடனடியாக ஸ்கிரைபா்:

ஈரோடு-நசியனூா் சாலை, நல்லிதோட்டம் பகுதியைச் சோ்ந்த சிஇடி மெட்ரிக். பள்ளி மாணவி கிருத்திகாவுக்கு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இவா் காலையில் தோ்வுக்கு தயாராகி வரும்போது வீட்டின் கதவு இடுக்கில் வலது கை நடுவிரல் நசுங்கி காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தையலிட்டு தோ்வு எழுத வந்திருந்தாா். இதையடுத்து, அவருக்கு ஸ்கிரைபா் மூலமாக தோ்வு எழுத ஆட்சியா் ச.கந்தசாமி அனுமதி வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டாா்.