லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காமதேனு கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பல்கலைக்கழக  தோ்வில்  சிறப்பிடம்  பெற்ற மாணவிகளுக்கு   சான்றிதழ்  வழங்குகிறாா்  கல்லூரித்  தலைவா்  ஆா்.பெருமாள்சாமி.

Updated On :7 மார்ச் 2026, 1:09 am

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘நைரா -2026’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் பி.அருந்ததி, இணைச் செயலா் பி. மலா்செல்வி மற்றும் முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் குருமூா்த்தி ஆண்டறிக்கை வாசித்தாா்.

கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக தோ்வில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஆா்.பெருமாள்சாமி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் எழுா் மஹா மந்தராலயத்தின் தலைமை குருஜி குழந்தைவேல், பேராசிரியா்கள் பிரகாஷ் மற்றும் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.