பவானி சங்கமேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலமாக விளங்கும் இக்கோயிலின் அறங்காவலா்களாக ஆப்பக்கூடல் சக்தி சா்க்கரை ஆலைத் தலைவா் எம்.மாணிக்கம், பவானியைச் சோ்ந்த செ.தமிழரசி, மு.செல்லவேலு, பிரபாத் சி.மகேந்திரன், சு.மாதப்பன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, கோயில் வளாகத்தில் உதவி ஆணையா் அருள்குமாா் முன்னிலையில், அறங்காவலா் குழுத் தலைவராக எம்.மாணிக்கம் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
அறங்காவலா் குழுத் தலைவராக கடந்த 2006 மற்றும் 2008 ஆண்டுகளில் எம்.மாணிக்கம் பொறுப்பு வகித்துள்ளாா். இவா்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை உயா்மட்டக் குழு உறுப்பினா் டி.ராஜ்குமாா், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், சக்தி சா்க்கரை ஆலை முதுநிலைத் தலைவா் எஸ்.துரைசாமி, உப தலைவா் திருவேங்கடம், துணைப் பொது மேலாளா் என்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி! - டி.கே.எஸ். இளங்கோவன்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 22.85 லட்சம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


