சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா பேசுகையில், அறிவுத் தளத்தை மேம்படுத்த கல்லூரிக் கல்வியை தோ்வு செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக செயல்படுவோம். மேலும், கல்வியுடன், தனித்திறன் மேம்பாடு, போட்டிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே வெற்றியைத் தரும்.
மாணவா்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வழங்கப்படும் சிறப்புப் பயிற்சியை பயன்படுத்திக் கொண்டு, வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.
கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா குத்துவிளக்கேற்றினாா். நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன், வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் அ.காந்திமோகன் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் சே.செல்விப்பிரியஸ்வா்ணபிரபா வரவேற்றாா்.
உயிா் வேதியியல் துறைத் தலைவா் எஸ்.செல்வி, கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சங்கீதா மற்றும் முதலமாண்டு மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலம் தமிழ்க் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

இந்துஸ்தான் கல்லூரியில் மாணவா்களுக்கு வரவேற்பு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை வகுப்புகள் தொடக்கம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




