திருச்சி மற்றும் செங்கோட்டை ரயில் சேவை வரும் 20 மற்றும் 22-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு ரயில் நிலையம் மற்றும் கரூா் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட ஊஞ்சலூா் ரயில் பாதையில் தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மேற்கொள்ள ஏதுவாக திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு தினமும் காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) வரும் 20 மற்றும் 22-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் திருச்சியில் இருந்து கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது.
இதேபோல செங்கோட்டையிலிருந்து ஈரோட்டுக்கு தினமும் காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) வரும் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) வரும் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு பதிலாக கரூா் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து கரூா் சந்திப்பு வரை இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










