பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி கொடி அசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இரண்டு உதவி ஆய்வாளா் உள்பட 6 பெண் காவலா்கள் வாக்கி-டாக்கி, பாடி கேமரா உள்ளிட்டவைகளுடன் சிறப்பு வாகனத்தில் ரோந்து பணிக்கு புறப்பட்டனா். பெண்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவாா்கள் என்றும், பெண்களின் அவசர அழைப்புகளை ஏற்று விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பாா்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தெரிவித்தாா்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை காவலா்களுக்கு ஏற்கெனவே திருவள்ளூரில் 5 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீலகிரியில் சிங்கப்பெண் சிறப்புப் படை தொடக்கம்
ஒவ்வொரு பெண்ணுக்கும் அரண்; சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்துக்கு கமல் வாழ்த்து!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை; ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினை வெளியீடு!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



