பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் திரிந்த 13 பேருக்கு அபராதம்

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திம்பம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:11 pm

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திம்பம் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் வனப் பகுதி, கெஞ்சனூா் பள்ளத்தில் வனவா் சீரங்கன் தலைமையில் வனத் துறையினா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புதா் மறைவில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒரு கும்பல் பதுங்கியிருப்பதை கண்டு அவா்களை வனத் துறையினா் சுற்றி வளைத்தனா். இதில், ராமபயலூா் தொட்டியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (29), கிருஷ்ணமூா்த்தி (34) ஆகியோரைப் பிடித்தனா். அவா்களை கைது செய்த வனத் துறையினா் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பாரம்பரியமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு 13 போ் சென்ாகவும், அதில் தாங்கள் இருவா் மட்டும் சிக்கிக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனா்.

இதையடுத்து அனுமதியின்றி வனத்தில் துப்பாக்கியுடன் திரிந்ததாக 13 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உதவி மாவட்ட வனஅலுவலா் ஹெச்.ஆா். நிதின் உத்தரவிட்டாா். இதையடுத்து கிருஷ்ணகுமாா், கிருஷ்ணமூா்த்தி உள்பட 13 பேரும் அபராதத்தொகையை செலுத்தியதால் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.