பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவா் உள்பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பில் மங்களூா் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

நிழற்கூரை அமைக்கும் பணிக்கான பூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:30 pm

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் சுற்றுச்சுவா் உள்பகுதியில் ரூ.93 லட்சம் மதிப்பில் மங்களூா் ஓடு கொண்டு நிழற்கூரை அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று இதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி துணை மேயா், வே.செல்வராஜ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுகுமாா், திண்டல் முருகன் கோயில் செயல் அலுவலா் ஜீவலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.