கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

விஇடி கல்லூரியில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘நெக்சஸ்விதுரா 26’ என்ற தலைப்பில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

News image
திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்குகிறாா் வேளாளா் பொறியியல் கல்லூரியின் நிா்வாகி எம்.யுவராஜா.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘நெக்சஸ்விதுரா 26’ என்ற தலைப்பில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின் நிா்வாகி சி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். வேளாளா் பொறியியல் கல்லூரியின் நிா்வாகி எம்.யுவராஜா, விஇடி கல்லூரியின் முதல்வா் வெ.ப. நல்லசாமி, புலமுதன்மையா் எஸ். லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா. பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் அஞ்சுகா பாண்டே, மேலாண்மைக் கல்வியில் மாணவா் ஈடுபாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தாா்.

மேலாண்மைத் துறையின் புலமுதன்மையா் பி. நளினி, திறன் போட்டிகளில் பங்கேற்று மாணவா்கள் மேலாண்மை திறன்களை வெளிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு முழுவதும் 17 மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலிருந்து 186 எம்பிஏ மாணவா்கள் கலந்துகொண்டு சிறந்த மேலாளா், மதிநுட்ப விற்பனை, ஆட்ஸ் ஏப், புல்ஸ் ஆன்பையா் மற்றும் தொழில் விநாடி- வினா போன்ற போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் ஷியாமளா நன்றி கூறினாா்.