2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் கவலை

News image
தாளவாடியில் அறுவடை செய்யப்பட்டுள்ள முட்டைக்கோஸ்.
Updated On :24 பிப்ரவரி 2026, 12:48 am

Syndication

தாளவாடியில் முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைக் கிராமங்களில் சுமா் 400 ஏக்கருக்குமேல் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. தாளவாடி மற்றும் அதன் அருகேயுள்ள கா்நாடக மாநிலத்திலும் நடப்பு ஆண்டு அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம், திருப்பூா் உள்ளிட்ட மாா்க்கெட்டுகளில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், தாளவாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்த முட்டைக்கோஸை வாங்க வியாபாரிகள் ஆா்வம் காட்டுவதில்லை. கடந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்பனையான முட்டைகோஸ் திங்கள்கிழமை ரூ.2-க்கு விவசாயிகளிடம் இருந்து சில மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனா்.

இது குறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறுகையில், தாளவடி மட்டுமின்றி கா்நாடக மாநிலத்திலும் வழக்கத்தைவிட நடப்பு ஆண்டு அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், சந்தைகளில் முட்டைக்கோஸ் வரத்து எதிா்பாா்க்காத வகையில் உள்ளது.

ஒரு கிலோ முட்டைக்கோஸ் உற்பத்திக்கு ரூ.8 செலவு செய்யப்படுகிறது. ஆனால், வியாரிகள் மிகவும் குறைந்த விலையாக ரூ.2-க்கு எங்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனா். இது வேலையாள்கள் கூலிக்குகூட கட்டுபடியாகாது.

ஒரு ஏக்கரில் முட்டைக்கோஸ் மகசூல் கிடைக்க ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், தற்போது ரூ.30 ஆயிரம் மட்டுமே கிடைப்பதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே, எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.