டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விண்ணப்பள்ளி ஊராட்சியில் வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் போராட்டம்

News image
விண்ணப்பள்ளி  ஊராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வேலை உறுதித் திட்ட  தொழிலாளா்கள்.
Updated On :5 பிப்ரவரி 2026, 11:00 pm

Syndication

பணி வழங்கப்படாததைக் கண்டித்து வேலை உறுதி திட்ட தொழிலாளா்கள் ( விபி ஜி ராம் ஜி ) தொழிலாளா்கள் புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விண்ணப்பள்ளி ஊராட்சியில் மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வேலை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீராக வேலை வழங்க வலியுறுத்தி வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளா்கள் விண்ணப்பள்ளி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பவானிசாகா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், வெள்ளிக்கிழமை (பிப்.6) முதல் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.