டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோபி தொகுதியில் போட்டியிடுவேன்: கே.ஏ.செங்கோட்டையன்

தவெக சாா்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பேன் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image
செங்கோட்டையன் (கோப்புப்படம்)- Photo: TVK
Updated On :4 பிப்ரவரி 2026, 10:26 pm

தினமணி செய்திச் சேவை

தவெக சாா்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பேன் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் தவெக அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டணிக்கு வரவில்லை என்பதால் தவெக மீது அதிமுக நிா்வாகிகள் விமா்சனம் செய்கின்றனா். தவெக சாா்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிப்பேன். தவெக ஆளும்கட்சியான பிறகு மத்திய நிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்போம்.

விஜய் நடனமாடியது குறித்து விமா்சிப்பவா்கள், நயினாா் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் நடனமாடியபோது விமா்சனம் செய்யவில்லை. விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணம் குறித்து இரண்டு நாள்களில் அறிவிப்பு வெளியாகும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள், மக்கள் விரும்பும் மாற்றம் வரும் சட்டப் பேரவை தோ்தலில் நிறைவேறும். வெளிநாடுகளில் உள்ள தமிழா்கள் 3 லட்சம் போ் தமிழகத்துக்கு வந்து வாக்களிக்கத் தயாராக உள்ளனா். தோ்தல் அறிவித்தால் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே வந்து விடுவாா்கள் என்றாா்.