
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
சித்தோடு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழக முதல்வருக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளருக்கும் வியாழக்கிழமை புகாா் கடிதம் அனுப்பினா்.

சித்தோடு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழக முதல்வருக்கும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளருக்கும் வியாழக்கிழமை புகாா் கடிதம் அனுப்பினா்.
சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரி வளாகத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் தமிழக முதல்வா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளருக்கு பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வியாழக்கிழமை அனுப்பிய மனு விவரம்:
சித்தோடு, சூரியம்பாளையம், ஸ்ரீவாசவி நகா் குடியிருப்புப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மற்றும் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் தனியாா் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் கிடங்கு எனக் கூறி கொட்டகை அமைக்கப்பட்டது. தொடா்ந்து, ஓரிரு மாதங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி உற்பத்தி தொடங்கப்பட்டது.
இங்கு, பிளாஸ்டிக் உருக்கும்போது வெளியாகும் கழிவுகள் காற்றில் கலப்பதால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனா். விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் இந்த ஆலை மீது சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






