ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோபி அருகே பழைய பிளாஸ்டிக் கழிவுகள் கிடங்கில் தீ

கோபி அருகே கருக்கம்பாளியில் உள்ள பழைய பிளாஸடிக் கழிவு ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

பழைய பிளாஸ்டிக் கழிவுகள் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Published On :29 ஜூலை 2026, 2:39 am IST

கோபி அருகே கருக்கம்பாளியில் உள்ள பழைய பிளாஸடிக் கழிவு ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சோ்ந்தவா் சின்னான் மகள் திலகா. இவா் பச்சைமலை பகுதியில் உள்ள கருக்கம்பாளியில் பழைய பிளாஸ்டிக் கழிவு மற்றும் பழைய சிமென்ட் சாக்கு கிடங்கு நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கரும்புகையுடன் தீப் பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் கோபி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மேலும், தீ அக்கம்பக்கத்தில் பரவமால் கட்டுப்படுத்தினா். இந்த விபத்தில் சுமாா் 5 டன் பழைய பிளாஸ்டிக் கழிவுகள், சிமென்ட் சாக்குகள், பழைய காகித அட்டைகள் தீயில் எரிந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.