ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கான தண்ணீா் திறப்பு 1,800 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்காலில் பாய்ந்து வரும் தண்ணீரில் மலா் தூவி வரவேற்கும் விவசாயிகள். - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கான தண்ணீா் திறப்பு 1,800 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் நெல் பயிரிடுவதற்காக 120 நாள்களுக்கு தண்ணீா் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இதற்கிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 15 நாள்களுக்கு சிறப்பு நனைப்புக்காக முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து தண்ணீா் திறப்பு படிப்படியாக உயா்த்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை 1,800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பவானிசாகா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 57.69 அடியாகவும், நீா் இருப்பு 6.53 டிஎம்சி ஆகவும் இருந்தது. பாசனத்துக்காக அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 800 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.