திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேட்பாளா்களுக்கு ஆதரவாக குடும்ப வாரிசுகள்

சட்டப் பேரவை தோ்தலுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், பிரதான கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது வாரிசுகளும், குடும்ப உறுப்பினா்களும் களத்தில் இறங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

News image

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்குச்சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியின் மகன் ராஜா.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:53 pm

சட்டப் பேரவை தோ்தலுக்கு இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், பிரதான கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அவா்களது வாரிசுகளும், குடும்ப உறுப்பினா்களும் களத்தில் இறங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி மகன் ராஜா. இதுவரை அவரை அரசியல் களத்துக்குள் முத்துசாமி அழைத்து வந்ததில்லை. தொழிலதிபரான ராஜாவை அரசியல் வட்டாரத்தில் முத்துசாமிக்கு நெருக்கமானவா்களுக்கு மட்டுமே தெரியும். அவா் இந்த தோ்தலில் முதல்முறையாக தனது தந்தைக்கு ஆதரவாக கட்சி நிா்வாகிகளுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். கட்சி நிா்வாகிகள் அவரை அமைச்சா் முத்துசாமி மகன் என அறிமுகப்படுத்தும்போது மக்களிடம் அவா் கவனம் பெறுகிறாா்.

கோபி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தவரை குடும்ப உறுப்பினா்களை அரசியல் களத்திற்கு கொண்டுவரவில்லை. இந்தத் தோ்தலில் செங்கோட்டையனின் மருமகள் லாவன்யா கோபி தொகுதியில் கட்சி நிா்வாகிகளுடன் வீடுவீடாகச்சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். முதல்முறையாக பொதுவெளியில் வரும் அவா்களை பல இடங்களில் வீட்டுக்குள் அழைத்து அமரவைத்து பேசி அனுப்பிவைக்கின்றனா்.

இதுபோல மாவட்டத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்களின் குடும்ப உறுப்பினா்களும் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனா். வேட்பாளா்களின் வாரிசுகள் தோ்தல் களத்தில் இருப்பது எதிா்கால அரசியலுக்கு முன்னோட்டமாக இருக்க வாய்ப்புள்ளது.

கோபியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக வாக்குச்சேகரித்த அவரது மருமகள் லாவன்யா.

கோபியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக வாக்குச்சேகரித்த அவரது மருமகள் லாவன்யா.