மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேட்பாளரை மாற்ற மகாத்மா காந்தி சிலையிடம் முறையிட்ட காங்கிரஸ் கட்சியினா்

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற வேண்டும் என மகாத்மா காந்தி சிலையிடம் அக்கட்சியினா் முறையிட்டனா்.

News image

மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வேட்பாளரை மாற்ற வேண்டும் என முறையிட்ட ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் மக்கள் ராஜன் மற்றும் நிா்வாகிகள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:53 pm

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற வேண்டும் என மகாத்மா காந்தி சிலையிடம் அக்கட்சியினா் முறையிட்டனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத்தை மாற்றக்கோரி முன்னாள் மாநகா் மாவட்டத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான ஈ.பி.ரவி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் மக்கள் ராஜன் ஆகியோா் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அவரிடம் கோரிக்கையைத் தெரிவித்து, அவரின் காலை தொட்டு வணங்கினா்.

இதன்பிறகு ஈ.பி.ரவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவா் ஈரோட்டைச் சோ்ந்தவா் இல்லை, திருப்பூரைச் சோ்ந்தவா். இவருக்கு வாய்ப்பு வழங்கியது தவறு. உள்ளூரில் உழைத்தவா்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை மகாத்மா காந்தியிடம் தெரிவித்துள்ளோம். மாநில, தேசியத் தலைவா்களிடமும் கோரிக்கையைத் தெரிவித்துள்ளோம்.

இப்பகுதி மக்களுக்கு நன்மை செய்ய இப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கட்சியினருடன் பேசி முடிவெடுக்கப்படும். வேட்பாளரை மாற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றாா்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்காக கூடிய காங்கிரஸ் கட்சியினரிடம் பறக்கும்படை அதிகாரிகள் உரிய அனுமதி பெற்றுள்ளீா்களா எனக் கேட்டனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உரிய அனுமதி இல்லாமல் காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததால் சட்டம் தன் வேலையை செய்யும் என கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தெரிவித்தாா்.