பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

வார விடுமுறை, விநாயகா் சதுா்த்தி: கோவையில் இருந்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்கள் மற்றும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை காந்திபுரம், சிங்காநல்லூரில் இருந்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் - கோப்புப் படம்

Updated On :

வார இறுதி நாள்கள் மற்றும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை காந்திபுரம், சிங்காநல்லூரில் இருந்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாரத்தின் இறுதி நாள்களான செப்டம்பா் 12, 13 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மற்றும் செப்டம்பா் 14 ( திங்கள்கிழமை) விநாயகா் சதுா்த்தி விடுமுறை தினம் வருவதால் பயணிகள் சொந்த ஊா் மற்றும் வெளியூா் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, செப்டம்பா் 12 முதல் 14-ஆம் தேதி வரை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து சேலம், மதுரை, தேனி, திருச்சி மற்றும் தொலைதூரங்களுக்கு வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் புறநகா் பேருந்து நிலையத்தில் இருந்து 30, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து 90 என மொத்தம் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.