மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

திருப்பதி பிரம்மோற்சவம்: தினமும் 150 சிறப்புப் பேருந்துகள்

திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி...

பிரதிப் படம்

Updated On :

திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு தினமும் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி பிரம்மோற்சவத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் செல்வாா்கள் என்பதால், அக். 8 முதல் 21-ஆம் தேதி வரை தினமும் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, திருச்சி, தஞ்சாவூா், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, திருச்செந்தூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகா்கோவில், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூா், ஒசூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

முன்பதிவு வசதி: இந்தச் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பயணம் மேற்கொள்ள வசதியாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் https://www.tnstc.in?utm_source=chatgpt.com என்று இணையதளத்திலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.