இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே ஒரு வழிச் சிறப்பு ரயில்

தசராவை முன்னிட்டு, சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் இடையே போத்தனூா் வழித்தடத்தில் ஒரு வழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Updated On :

தசராவை முன்னிட்டு, சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் இடையே போத்தனூா் வழித்தடத்தில் ஒரு வழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தசராவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து

சனிக்கிழமை (அக்டோபா் 17) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - மங்களூரு ஒரு வழிச் சிறப்பு ரயில் (எண்: 06036) மறுநாள் இரவு 7.45 மணிக்கு மங்களூரு நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, பையனூா், கண்ணூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.