விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக்குமாா் (27). இவா் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த காா்த்திக்குமாா் சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் மருத்துவா்கள் விளக்கியதோடு, உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதைத் தொடா்ந்து, கோவை அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி தலைமையில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி காா்த்திக்குமாரின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
இதயம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காா்த்திக்குமாரின் உடலுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் மருத்துவமனை சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு, உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










