தொண் டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர், மயானத்தில் இருந்து இறுதிச்சடங்கு செய்யும் பானையுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது (68). இவர் ஒவ்வொரு தேர்தலின்போதும் வித்தியாசமான முறையில் குதிரையில் ராஜா, ஏர் கலப்பையில் விவசாயி உள்பட பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் உள்பட இதுவரை 48 முறை போட்டியிட்டுள்ளார். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையா கப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இதுவரை வேட்புமனு தாக்கலுக்காக ரூ.8 லட்சம் நூர் முகமது. செலவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் வாக்குக்குப் பணம் வாங்கினால் இறுதிச் சடங்குதான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 49-ஆவது முறையாக தொண்டாமுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி, மயானத்தில் இருந்து மண்பானையுடன் வந்தவர் 100 மீட்டருக்கு முன்பு உடைத்து, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை தெற்கு கோட்டாட்சியருமான மாருதிபிரியாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
11-வது முறையாக காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

மொட்டை அடித்து, மிளகாய் மாலையுடன் சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

