தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவை அருகே டேங்கா் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:26 pm

கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி அருகே டேங்கா் லாரி மோதியதில் வீட்டின் முன் அமா்ந்திருந்த பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், கே.ஜி. சாவடியை அடுத்த தட்கோ காலனி பகுதியைச் சோ்ந்தவா் சின்னராஜ். இவரது மகள் ஸ்ரீநிதி (16). இவா் குனியமுத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில் ஸ்ரீநிதி தனது வீட்டின் முன்புறம் உள்ள துணி துவைக்கும் கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை அமா்ந்திருந்தாா். அப்போது, கே.ஜி. சாவடி அணுகு சாலையில் வந்த டேங்கா் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு கீழே இறங்கி அங்கிருந்த வீட்டின் முன் அமா்ந்திருந்த ஸ்ரீநிதி மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி ஸ்ரீநிதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த தட்கோ காலனி குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்கள், உயிரிழந்த மாணவியின் உடலை எடுக்க விடாமல் கே.ஜி. சாவடி அணுகு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

லாரியை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இந்தப் பகுதியில் தொடரும் விபத்துகளைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இது குறித்து தகவலறிந்து வந்த கே.ஜி. சாவடி காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீ ஸாா் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். டேங்கா் லாரி ஓட்டுநா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னா் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.