கோவையில் இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரத்தை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், அரூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (22). இவா் கோவை, பீளமேடு பட்டாளம்மன் கோயில் பகுதியில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் அப்பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபா், பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். சுரேஷ் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த நபா், சுரேஷின் கைப்பேசியைப் பறித்து ‘ஜிபே’ செயலி மூலம் ரூ.30 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

வீடு புகுந்து பணம் திருட்டு

தலையில் கல்லைப் போட்டு எலக்ட்ரீஷியன் கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


