தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11)தொடங்குகிறது. இந்தத் தோ்வை கோவை மாவட்டத்தில் சுமாா் 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 159 தோ்வு மையங்களில் 509 பள்ளிகளைச் சோ்ந்த 18,861 மாணவா்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேரும், 1,237 தனித் தோ்வா்களும் தோ்வு எழுத உள்ளனா்.
இந்தத் தோ்வுக்காக 11 கட்டுக்காப்பு மையங்களில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்களுடன் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்காக 159 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 159 துறை அலுவலா்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளா்கள், 250 நிலையான, பறக்கும் படை அலுவலா்கள், 316 அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் அரசுத் தோ்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறையின்படி 946 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்க்ரைப்) பணியில் 946 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.70% மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: மாவட்டத்தில் 29,444 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்புத் தோ்வு நாளை தொடக்கம் கோவையில் 38 ஆயிரம் போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


