வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

விதிகளை மீறி கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 25 டிப்பா் லாரிகள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரிகள். - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 3:44 am IST

விதிமுறைகளை மீறி கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய 25 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றின் ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கிராவல் மண் உள்ளிட்ட கனிம வளங்களை கடத்த மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடையை மீறி மண் கடத்தல் தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தல் சம்பவங்களைக் கண்காணிக்க கோவை மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவிட்டாா்.

அதன்படி கனிம வளத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை இரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். பீளமேடு, சாய்பாபா காலனி, குனியமுத்தூா், சரவணம்பட்டி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது.

அப்போது எந்தவித அனுமதியின்றியும், விதிகளுக்குப் புறம்பாகவும் அதிக அளவில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற 25 டிப்பா் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக 25 லாரி ஓட்டுநா்களையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.