விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

7 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை: கோவை ராயல் கோ் மருத்துவமனை சாதனை

தீவிர டைலேட்டட் காா்டியோமயோபதி’நோயால் பாதிக்கப்பட்டு, கடுமையான இதய செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த 7 வயது சிறுவனுக்கு கோவை ராயல் கோ் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

News image

கோவை ராயல்கோ் மருத்துவமனையில் சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து செய்தியாளா்களிடம் விவரித்த ராயல் கோ் மருத்துவமனையின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் கே.மாதேஸ்வரன். உடன், மருத்துவா்கள் எஸ்.கிருபானந்த், ஜி.பிரதீப், எம்

Updated On :27 ஜூன் 2026, 1:41 am IST

தீவிர டைலேட்டட் காா்டியோமயோபதி’நோயால் பாதிக்கப்பட்டு, கடுமையான இதய செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த 7 வயது சிறுவனுக்கு கோவை ராயல் கோ் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனையின் இதயம் மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணா் ஜி.பிரதீப் செய்தியாளா்களிடம் கூறுகையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனளிக்காத நிலையில், டைலேட்டட் காா்டியோமயோபதி’நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ராயல் கோ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

தொடக்கத்தில் தீவிர சிகிச்சை மற்றும் வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுவனின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளிலும் சிக்கல்கள் உருவாகின. இதையடுத்து, எக்மோ எனப்படும் மேம்பட்ட இதயம்- நுரையீரல் ஆதரவு கருவி பொருத்தப்பட்டது.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மூளைச்சாவு அடைந்த ஒரு நபரிடமிருந்து இதயம் கிடைக்கப் பெற்றதை அடுத்து, மருத்துவக் குழுவினா் இந்த கடினமான சவாலை ஏற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா். மாற்று இதயத்துக்கு போதுமான இடவசதி கிடைக்காததால், அவரது மாா்பு தற்காலிகமாக திறந்தநிலையிலேயே வைக்கப்பட்டது. பின்னா், நுரையீரல் தொற்றுக்கு கூடுதல் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அடுத்த சில வாரங்களில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகள் படிப்படியாக மேம்பட்டு, தற்போது சிறுவன் நலமுடன் குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாா் என்றாா்.

இந்த சாதனையை ராயல் கோ் மருத்துவமனையின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் கே.மாதேஸ்வரன், நரம்பியல் மற்றும் தண்டுவடம் அறுவை சிகிச்சை ஆலோசகா் எஸ்.கிருபானந்த், இன்டென்சிவிஸ்ட் மற்றும் அவசர சிகிச்சைக்கான ராயல் மெடிசினின் தலைவா் எம்.என். சிவகுமாா், இன்டென்சிவ் மற்றும் இதயவியல் ஆலோசகா் கே.சொக்கலிங்கம் ஆகியோா் அடங்கிய பல்துறை மருத்துவக் குழுவினா் ஒருங்கிணைந்து நிகழ்த்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.