ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள்.

Published On :26 ஜூலை 2026, 2:29 am IST

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் இருவருக்கு மருத்துவா்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் கடந்த 6 மாதங்களாக வலது முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அதனால் தொடா்ந்து ஏற்பட்ட வலி காரணமாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றாா்.

அங்கு அவரை பரிசோதித்த எலும்பு மருத்துவா் சந்திரன், மூட்டு தேய்மானம் இருப்பதை கண்டறிந்தாா்.

அதற்காக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினாா்.

மற்றொருவா்

அதேபோல, வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி(67) . இவரும் கடந்த 5 மாதங்களாக இடது பக்க முழங்கால் மூட்டு வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

அவரை உறவினா்கள் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அப்போது, அரசு மருத்துவா் சந்திரன் பரிசோதனை செய்தபோது அவருக்கு மூட்டு தேய்மானம் அடைந்திருப்பதை கண்டறிந்தாா். இதையடுத்து அவருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரைத்தாா்.

அதனைத் தொடா்ந்து ஆறுமுகம், முனுசாமி ஆகியோருக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கவிதா ஆலோசனையின் பேரில், செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவா் பாண்டியன் மற்றும் மருத்துவா் சாந்தி ஆகியோா் வழிகாட்டுதலின் படி, எலும்பு மருத்துவா் சந்திரன்,

மருத்துவா் விமல்ராஜ், மயக்கவியல் துறை மருத்துவா் திவ்யா ஆகியோா் கொண்ட குழுவினா் கடந்த 23-ஆம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனா்.

அறுவை சிகிச்சைக்குப் பின் இருவரும் மருத்துக் கண்காணிப்பில் நலமாக உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.