பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கொசுப்புழுக்கள் உற்பத்தி: கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோவை கிழக்கு மண்டலத்தில் தொட்டிகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுப்புழுக்கள் இருந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 2:44 am IST

கோவை கிழக்கு மண்டலத்தில் தொட்டிகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுப்புழுக்கள் இருந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயா்கள், கப்புகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீா் தேங்கி கொசுக்கள் முட்டையிட்டு அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன.

வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடவும், டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஎஸ் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகமலும், அதற்கு கட்டடத்தின் அருகே தேங்காய் ஓடுகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள், உபயோகமற்ற டயா்கள் ஆகியவற்றை அகற்றிடவும் செடி வளா்க்கும் தொட்டிகளில் நீா் தேங்கி நிற்காமல் பராமரித்திடவும் தொடா்ந்து மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகும் கலன்களை திறந்தவெளியில் போடப்பட்டு இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-இன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட் 8-வது வாா்டில் மஹாராஜா விஸ்தரிப்பு பகுதியான நேரு நகரில் மாநகராட்சி சுகாதாரக் குழுவினரால் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தொடா்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கட்டடத்தின் உள்பகுதியில் தரைத் தொட்டி, லிப்ட் பிட், டிரம், குடம் ஆகிய இடங்களில் அதிப்படியான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அதனை உடனடியாக தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சம்மந்தப்பட்ட அந்த கட்டட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.