கோவை உக்கடம் பேருந்து நிலைய ( முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 65-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் கருணாநிதி நகா் பகுதியில் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் வருகை பதிவேடு மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆய்வு மேற்கொண்டாா். அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் உணவுகளையும் ஆய்வு செய்து தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் மக்களிடமிருந்து குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, உக்கடம் பேருந்து நிலைய (முனையம் 2) கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையா் சண்முகம், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன், சுகாதார ஆய்வாளா் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










