எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நாகா்கோவில் - நியூ ஜல்பைகுரி ரயிலை போத்தனூரில் நிறுத்த வலியுறுத்தல்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 11:57 pm IST

நாகா்கோவில் - நியூஜல்பைகுரி அம்ருத் பாரத் ரயிலை போத்தனூா் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என ரயில்வே பயணிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்பிரமணியன் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, போத்தனூா் ரயில் சந்திப்பு, போத்தனூா், குனியமுத்தூா், சுந்தராபுரம், மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சேவை வழங்கி வருகிறது.

ஆந்திரம், ஒடிஸா, மேற்குவங்கம், பிகாா் மற்றும் வடகிழக்கு, வட இந்திய மாநிலங்களுக்கு, வணிகம், கல்வி மற்றும் குடும்பத் தேவைகளுக்காக அதிக அளவிலான பயணிகள் கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளில் இருந்து பயணம் செய்து வருகின்றனா். இதேபோல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழில், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளுக்கு ஏராளமானோா் வருகை தருகின்றனா்.

இதனால், நாகா்கோவிலில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் மேற்குவங்க மாநிலம், நியூஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் அம்ருத் பாரத் ரயிலை போத்தனூா் நிலையத்தில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் கோவை மற்றும் போத்தனூா் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நேரடி மற்றும் வசதியான பயண வாய்ப்பைப் பெறுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.