அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :14 ஜூன் 2026, 2:45 am IST

ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து ஜூன் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய நாள்களில் காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு போத்தனூா், சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் செல்லும் எா்ணாகுளம் - டாடா நகா் ரயில் (எண்: 18190) 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல, ஆலப்புழையில் இருந்து ஜூன் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய நாள்களில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு கோவை, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் செல்லும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.